மீள்குடியேற்றத்திற்கான தயார்படுத்தல்கள் தற்போது இடம்பெற்று வருவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் மற்றும் குடிவரவு, அகதிகள், குடியுரிமை தொடர்பான அமைச்சர் அஹமட் ஹூசைன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைட் ஹெல்மட் குழுவினரின் விஸ்தரிப்பு, அவர்களுக்கான பயிற்சி நடவடிக்கை என்பவற்றிற்கு கனடா ஏற்கனவே உதவி செய்திருந்தது. இந்நிலையில், சிரியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட குறித்த குழுவினரின் ஒரு பகுதியினரை தமது நாட்டில் மீளக் குடியேற்றவுள்ளதாக கனடாவின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் மனிதநேய செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த வைட் ஹெல்மட்ஸ் என்ற சிவில் பாதுகாப்புக் குழுவினர், இஸ்ரேல் படையினரின் உதவியுடன் கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி இரவோடு இரவாக குடும்பத்தார் சகிதம் வெளியேற்றப்பட்டனர்.
கடந்த பல வருட காலமாக சிரியாவின் டமாஸ்கஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களின்போது அவசர மீட்பு நடவடிக்கைகள், மனிதாபிமான உதவிகள் என்பவற்றை மேற்கொண்டு வந்த வைட் ஹெல்
Comments
Post a Comment