கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் அவசியம் இந்திய புலனாய்வு அமைப்பிற்கு கிடையாது. கொலை சதித்திட்டம் தொடர்பிலான விசாரணைகளை திசைதிருப்பவே இவ்வாறான வதந்திகள் பரப்பப்படுகின்றன.
அத்துடன் கொலை சதியின் சூத்திரதாரி யார் என்பதை கண்டறிய வேண்டுமாயின் நாலக சில்வாவை உடனடியாக கைது செய்து தடுப்புக்காவலில் வைத்து விசாரனைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவினை சீர்குலைப்பதாகவே குறித்த குற்றச்சாட்டு அமைந்துள்ளது” என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment