மனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றவாளிகளை இலக்காகக் கொண்ட முதல் பிரச்சாரம் பொலிசாரால் ஸ்கொட்லாந்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
£25000 நிதியைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பிரச்சாரம் சமூகங்களில் என்ன நடக்கிறது என்பது குறித்த பொது விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 44 பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்காக கடத்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஏழு பெண்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கொட்லாந்து முழுவதும் முன்னெடுக்கப்பட்ட அண்மைய தேடுதல்களில், கடத்தப்பட்ட 12 பேர் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர். வடக்கு அயர்லாந்து காவல்துறை மற்றும் ரோமானிய காவல்துறையுடன் இணைந்து ஸ்கொட்லாந்து பொலிசார் இந்த தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த பிரச்சாரம் சாத்தியமான மனிதக்கடத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோக அறிகுறிகளை கண்டறிவதற்கு மக்களை வலியுறுத்துமென அறியத்தரப்பட்டுள்ளது.
சமூக பாதுகாப்பு கிளாஸ்கோ அமைப்பால் நடத்தப்படும் கடத்தல் விழிப்புணர்வு கூட்டணி இப்பிரச்சாரத்துக்கு ஆதரவு வழங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment