இது தொடர்பாக தனது இன்ஸ்ரகிராம் பக்கத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி குறிப்பிட்டுள்ளார்.
நடிகை ஷில்பா ஷெட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவுஸ்திரேலியன் ஏயார்லைன்ஸ் விமானத்தில் சென்ற அவர் மெல்போனில் இறங்கித் தனது உடமைகளைச் சோதனையிடும்போது விமான நிலையப் பெண் ஊழியர் கரம்பி என்பவர் இவ்வாறு நடந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
அப்போது அவரது பேச்சு, செயல்பாடு மற்றும் நடவடிக்கை இனவெறிப் பாகுபாட்டைக் காட்டுவதாக இருந்தது என ஷில்பா ஷெட்டி மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மிக நீண்ட நேரம் தன்னைச் சோதனை செய்ததாகவும், இது குறித்து மேலதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தும் அவர்கள் அதைப்பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
Comments
Post a Comment