ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அண்மையில் விளக்கம் கொடுத்தேன்.
அதேதினத்தன்று, கொழும்பு சங்கிரீலா ஹோட்டலில் பிரதமரும் நானும் இரவு நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தோம்.
இரவு 10.00 மணிக்கு எனக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அண்டன் தேசப்பிரிய என்பவரே தொடர்பு கொண்டிருந்தார். எனக்கு தேவையற்ற வார்த்தையில் திட்டிவிட்டு, கொலை செய்வதாகவும் மரண அச்சுறுத்தல் விடுத்தார்.
40 விநாடிகள் பேசிக் கொண்டு செல்லும் போது நான் தொலைபேசியைத் துண்டித்தேன்“ என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
Comments
Post a Comment