இதுவரையில் 40 ஆயிரத்து 298 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

Image result for rநாடளாவிய ரீதியில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40 ஆயிரத்து 298 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதத்தில் டெங்கு நோயினால் 5 ஆயிரத்து 886 பேரும், ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 744 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த வருடத்தில் அதிகமான டெங்கு நோயாளர்கள் ஜனவரி மாதம் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 278 என தெரிவிக்கப்படுகின்றது.

Comments